யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்
யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வடக்குப் பாதை தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து யூன் 1990 முதல் இயங்காமல் இருந்தது. இந்நிலையம் போர் உக்கிரமடைந்த காலத்தில் பெரிதும் சேதமுற்றது. மே 2009 இல் போர் முடிவடைந்தததை அடுத்து இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் இப்பாதையின் புனரமைப்பை மேற்கொண்டது. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் அதிகாரபூர்வமாக இயங்குகிறது.




